மணிமண்டப இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு

உசிலம்பட்டி: பார்வர்ட் பிளாக் மூத்த தலைவர் மூக்கையாத்தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியிலுள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

பின் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மூக்கையாத் தேவர் மணிமண்டபம் அமையவுள்ள இடத்தை கலெக்டர் பிரவீன்குமார், உதவி கலெக்டர் உட்கர்ஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் மணிமாறன், நகர், ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் உடன் சென்றனர்.

பின் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர், பின்தங்கிய மக்களுக்காக தொண்டாற்றிய தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பது, சிலைகள் அமைப்பது என சிறப்பு சேர்த்து வருகிறார். அந்த பட்டியலின்படி மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட உள்ளது. மதுரையில் கலைஞர் நூலகம் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு போட்டி தேர்வு மாணவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது என்றார்.

Advertisement