ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு; நீதிமன்றத்தில் அமைச்சர் சரண்

கொல்கட்டா : மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் அம்மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா நேற்று சரணடைந்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சராக சந்திரநாத் சின்ஹா, 62, பதவி வகிக்கிறார்.
மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக, இவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் நடந்த பண மோசடி குறித்து அமலாக்கத் துறையும் வழக்கு பதிந்துள்ளது.
விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் சந்திரநாத் சின்ஹாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக, வரும் 12ல், கொல்கட்டாவில் உள்ள பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கொல்கட்டாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் சந்திரநாத் சின்ஹா நேற்று சரணடைந்தார். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
'விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; கொல்கட்டாவை விட்டு வெளியேறக் கூடாது' என, அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் சந்திரநாத் சின்ஹாவுக்கு மீண்டும் சம்மன் அனு ப்ப அமலாக்கத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும்
-
ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்
-
மேலப்பாளையத்தில் போலி பத்திரப்பதிவு சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
-
நடராஜருக்கு ஆவணி சதுர்த்தி மகா அபிஷேகம்
-
பழனிசாமி இன்று திருக்கோவிலுார் வருகை மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு
-
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க கண் சிகிச்சை முகாம்
-
சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா