கால்பந்து: இந்தியா கலக்கல்

தோஹா: ஆசிய கால்பந்து தகுதிச்சுற்றில் (23 வயது) இந்தியா, 6-0 என புருனேயை வென்றது. இருப்பினும் 5வது இடம் பெற்று வெளியேறியது.
சவுதி அரேபியாவில், 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து 7வது சீசன் (2026, ஜன. 7-25) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில், 44 அணிகள், 11 பிரிவுகளாக பங்கேற்றன.
கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த 'எச்' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, புருனே அணிகள் மோதின. இந்திய அணிக்கு விபின் மோகனன், (5, 8, 62வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். முகமது அய்மன் (87, 90+7) இரண்டு கோல் அடித்தார். ஆயுஷ் தேவ் செத்ரி (42) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் கத்தார் 2-1 என பஹ்ரைனை வென்றது. இதையடுத்து கத்தார் அணி (9 புள்ளி) முதலிடம் பிடித்து ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்தியா (6) இரண்டாவது இடம் பிடித்தது.
ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாவது இடம் பிடித்த சிறந்த அணிகளுக்கான வரிசையில் சீனா (7), உஸ்பெகிஸ்தான் (7), லெபனான் (7), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (6), இந்தியா (6), 'டாப்-5' இடம் பெற்றன. இதில் 'டாப்-4' அணிகள் மட்டும் ஆசிய கோப்பைக்கு முன்னேறின. கோல் அடிப்படையில் பின்தங்கிய இந்தியா, ஆசிய கோப்பை வாய்ப்பை இழந்தது.
மேலும்
-
ஐகோர்ட் வக்கீல் கொலையில் பள்ளி தாளாளர் மகனும் கைது
-
பணி நாளில் பள்ளிக்கு லீவு விட்ட பி.டி.ஓ., சஸ்பெண்ட்
-
விவேகானந்தர் பாறை செல்லாமல் திருவள்ளுவர் சிலைக்கு தனி பாதை எம்.எல்.ஏ., வேல்முருகனால் குமரியில் சர்ச்சை
-
யுனிகார்ன் அந்தஸ்தை இழந்த 4 ஆன்லைன் கேம் ஸ்டார்ட் அப்கள்
-
கரூரில் தமிழ் கனவு நிகழ்ச்சி
-
வாழைத்தார்கள் விற்பனை