பணி நாளில் பள்ளிக்கு லீவு விட்ட பி.டி.ஓ., சஸ்பெண்ட்
திருச்சி:பணி நாளில், அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து, 'உங்களுடன் ஸ்டாலின ் ' முகாம் நடத்தியதால், பி.டி.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆழத்துடையான்பட்டி அரசு பள்ளிக்கு, செப்., 9ம் தேதி, வேலை நாளில் விடுமுறை அளித்து, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்பட்டது. பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இதை கண்டித்து, தன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.
இது குறித்து, கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் கேட்டதற்கு, ''முதன்மை கல்வி அதிகாரியிடம் கலந்தாலோசிக்காமல், பள்ளிக்கு விடுமுறை அளித்தது மிக மிக தவறு. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கூறி இருந்தார்.
இந்நிலையில், அரசு பள்ளிக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'
-
சித்தாபுதுார் குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு