கிரைம் கார்னர்

கஞ்சா வியாபாரி கைது
பேசின்பாலம்: பேசின்பாலம், சால்ட் கோட்ர்ஸ் பகுதியில் நின்றிருந்த புளியந்தோப்பு சாஸ்திரி நகரைச் சேர்ந்த சஞ்சய், 21, என்பவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அயனாவரம், நியூ ஆவடி சாலையில், 1.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்த அயனாவரம் கிருபானந்தம், 22, கோகுல், 25, ஆதிஹரிஷ், 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
பைக் திருடிய
சிறுவர்கள் கைது
திருவல்லிக்கேணி: சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் ராகேஷ், 26, கடந்த மாதம் 26ல், வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் காலை பார்த்தபோது, வாகனம் திருடுபோனது தெரிந்தது.
திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவரை பிடித்தனர். இருவரையும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் நேற்று அடைத்தனர். அவர்களிடமிருந்து ஐந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், ராயப்பேட்டை, புதுப்பேட்டை கார்டன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், 70, என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடிய, பழைய குற்றவாளி ராயப்பேட்டை ஆனந்த், 23, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெண்ணை தாக்கிய
ஐந்து பேருக்கு சிறை
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, 41. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் மும்தாஜ் என்பவரின் குடும்பத்தினருக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று, புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோடு முருகன் கோவில் அருகே, இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பரமேஸ்வரி கொடுத்த புகாரையடுத்து, புளியந்தோப்பு அமீர் பாஷா, 41, கவுஸ் பாஷா, 37, சபீர், 23, ‛லாங்' சந்துரு, 21, ஆவிஷ்குமார், 20, ஆகிய ஐவரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
நாட்டின் வளர்ச்சிக்கு வடகிழக்கு முன்னேற்றம் அவசியம்: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
-
நாட்டின் மீதான அந்தப் பார்வையை மாற்ற வேண்டும்; சசி தரூர்
-
திருச்சியில் 'உங்கள் விஜய்'
-
திருச்சியில் 'உங்கள் விஜய்'
-
நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லி தேர்தல்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு
-
சீக்கிய பெண் மீது பாலியல் தாக்குதல்: இன வெறியால் பிரிட்டனில் கொடுமை