கலெக்டர் அலுவலக ஊழியர் சாலை விபத்தில் பலி

சோழவரம்;திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஓட்டுநர் மீது வேன் மோதியதில் உயிரிழந்தார்.

சோழவரம் அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் பாபு, 26. இவர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் அரசு அலுவலர்களின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம், சோழவரம் அடுத்த அலமாதி பகுதியில் இருந்து, செங்குன்றம் நோக்கி 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த 'டாடா டிரக்' வாகனம், பாபுவின் பைக் மீது மோதியது. இதில், பாபு பலத்த காயமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement