காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

சென்னை; காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டைமானின் துணிச்சலும்,ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே என்று பாமக தலைவர் அன்புமணி பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
நேபாளத்தில் தலைவிரித்தாடிய ஆட்சியாளர்களுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் போராட்டத்தின் போது, தலைநகர் காத்மாண்டுவில் தீயிட்டு எரிக்கப்பட்ட நட்சத்திர விடுதியில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 5 பேரை, அதே விடுதியில் தங்கியிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமான் காப்பாற்றியதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது துணிச்சலான செயலை நானும் பாராட்டுகிறேன்.
காத்மண்டு கலவரத்தில் எரிந்து கொண்டிருக்கும் விடுதியில் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றுவது மிகவும் ஆபத்தானது என தெரிந்தும், விடுதி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியர்களைக் காப்பாற்றி வெளிக்கொண்டு வந்த செந்தில் தொண்டைமானின் துணிச்சலும், ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே. அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (2)
sundarsvpr - chennai,இந்தியா
17 செப்,2025 - 13:27 Report Abuse

0
0
Reply
pakalavan - ,இந்தியா
17 செப்,2025 - 12:16 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நவராத்திரி முதல் நாளில் 10 ஆயிரம் கார் விற்பனை: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
-
‛‛சேட்டான்''கள் செய்த சேட்டை: பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி: மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள்!!
-
மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
பிரதமர் இல்லம் சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன: டி.கே. சிவகுமார் கிண்டல்
-
நாமக்கல்லில் வருமான வரித்துறை ரெய்டு
-
அக்.14ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை!
Advertisement
Advertisement