பாலமேடு ஜல்லிக்கட்டு: 2 மணிநேரம் தாமதமாக வந்தார் உதயநிதி

24

மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி 2 மணிநேரம் தாமதமாக துவங்கியது. இதனை துவக்கி வைக்க 7.30 மணிக்கு வரவேண்டிய துணை முதல்வர் உதயநிதி 9.30 மணிக்கு தான் வந்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மதுரையின் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

Latest Tamil News

மாட்டுப் பொங்கல் தினமான இன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது.

Latest Tamil News

துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், 7.30 மணிக்கு துவங்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, 9 மணியாகியும் உதயநிதி வராத நிலையில், கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.



Latest Tamil News

அதன்பிறகு, மைதானம் வந்த அமைச்சர் உதயநிதி கொடியசைத்து வைத்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.



அப்போது, ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் உதயநிதிக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உதயநிதியுடன் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரியும் கலந்து கொண்டார்.

Latest Tamil News


காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பதுங்கி, பாய்ந்து அடக்கினர்.


Latest Tamil News


முன்னதாக, கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உள்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Latest Tamil News

மருத்துவ சோதனை நடந்தது. அதன்பிறகு, தகுதி வாய்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமாட அனுமதிக்கப்பட்டனர்.

Latest Tamil News

மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர் மாடம், இரு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

Latest Tamil News


Latest Tamil News


இதில், முதலிடம் படித்த பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

Latest Tamil News

Advertisement