தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டு திருவள்ளுவர்; பிரதமர் புகழாரம்
புதுடில்லி: தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழில் அவர் விடுத்த எக்ஸ்தளப்பதிவில்; திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார்.
தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (3)
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
16 ஜன,2026 - 11:30 Report Abuse
திருவள்ளுவருக்கு பட்ட, கொட்ட, காவி உடை எல்லாம் போட்டு அவரை ஒரு ஆன்மிகவாதி ஆக்கியாச்சு. திருக்குறளை முழுமையாக, படித்து அறிந்தவர்களுக்கு தெரியும், அவர் குறள்கள் ஆன்மிகம் பற்றி ஒரு இடத்திலும் பேசவில்லை, மாறாக, பகுத்தறிவும், நிர்வாகம் மற்றும் வாழ் ஒழுக்கத்தை மட்டுமே சொல்கிறதென்று. 0
0
Reply
Balasubramanian - ,
16 ஜன,2026 - 11:27 Report Abuse
இறைவன் அடி சேராதார் எல்லாம் இறை மாட்சி பற்றியும் அறிவு ஊக்கம் பற்றியும் பேசும், வினைத் தூய்மை இல்லாதார் ஆட்சி நீங்க அந்த திருவள்ளுவரே அருள வேண்டும் 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
16 ஜன,2026 - 10:11 Report Abuse
இப்படிப்பட்ட தமிழ் மோகம் கொண்ட பிரதமரை நாம் பெற்றிருப்பது நமக்கு பாக்கியம் என்றே சொல்லலாம் மென்மேலும் அவருக்கு பக்க பலமாக இருந்து தமிழ் நாட்டிற்கு சிறந்த ஆட்சிபலமாக திகழ இந்த பொங்கல் தினங்களில் பிரார்த்திக்கிறோம் 0
0
Reply
மேலும்
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
-
வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்; முதல்வர் ஸ்டாலின்
-
பண்டிகை நாளில் குட்நியூஸ்; தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.480 சரிவு
-
திருவள்ளுவர் தின விழா விருதுகளை வழங்கினார் முதல்வர்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்
Advertisement
Advertisement