பண்டிகை நாளில் குட்நியூஸ்; தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.480 சரிவு

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் மட்டும் கிலோவுக்கு 4,000 ரூபாய் சரிந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 14) ஆபரண தங்கம் கிராம் 13,280 ரூபாய்க்கும், சவரன் 1,06,240 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 307 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையான நேற்று (ஜனவரி 15) தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 13,290 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 1,06,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 310 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 3,000 ரூபாய் அதிகரித்து, 3.10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், மாட்டுப் பொங்கலான இன்று (ஜனவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையும் சரிவு

புதிய உச்சத்தை தொட்டு வரும் வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 306 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Advertisement