'பிக் பாஷ் லீக்': அஷ்வின் ஆர்வம்

சிட்னி: இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 39. கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், சமீபத்தில் பிரிமியர் லீக் தொடரில் இருந்து விடை பெற்றார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'பிக் பாஷ் லீக்' 15வது சீசனில் (டிச. 15 - 2026, ஜன. 26) சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார் அஷ்வின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதன்மூலம் இத்தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஷ்வின்.
அஷ்வின் கூறுகையில், ''டேவிட் வார்னர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரது தலைமையில் விளையாட இருப்பது மகிழ்ச்சி. சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement