தர்மபுரியில் 'குரூப் - 2' தேர்வு: 4,054 தேர்வர்கள் 'ஆப்சென்ட்'

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த 'குரூப் - 2' மற்றும் 'குரூப் - 2ஏ' தேர்வில், 4,054 தேர்வர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள், 'குரூப் - 2' மற்றும் 'குரூப் - 2ஏ' பதவிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில், 65 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை கண்காணிக்க, 4 பறக்கும்படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 65 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில், 65 மையங்களில் நடந்த தேர்விற்கு, 20,109 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில் நேற்று, 4,054 தேர்வர்கள், 'ஆப்சென்ட்'
ஆன நிலையில், 16,055 பேர் தேர்வெழுதினர்.

* கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் - 2' முதல்நிலை எழுத்துத்தேர்வு மையத்தை கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டு கூறுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இத்தேர்வு, 31 மையங்களில் நடந்தது. 'குரூப் - 2' மற்றும் 'குரூப் - 2ஏ' எழுத்து தேர்விற்கு, 11,039 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில், 8,172 நபர்கள் தேர்வு எழுதினர். 2,867 நபர்கள் தேர்வு எழுதவில்லை,'' என்றார்.
இதில், ஆர்.டி.ஓ.,(பொ) தனஞ்செயன், தாசில்தார் சின்னசாமி
உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement