அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை, வெட்டி கொல்ல முயற்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜா, 53, என்பவர், அபிஷேகம் மற்றும் பிரசாத கடை பிரிவு பொறுப்பாளராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பணி முடிந்து வழக்கம் போல பெரும்பாக்கம் சாலையிலுள்ள அவரது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இருட்டான பகுதியில் ராஜா சென்றபோது, முகமூடி அணிந்த ஒருவர், அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி கொல்ல முயற்சித்தார். ராஜா தடுத்ததில், அவரது கையில் வெட்டு விழுந்தது.
அவரது அலறலை கேட்டு அவ்வழியாக பைக்கில் சென்றவர்கள் வந்ததால், அந்த நபர் தப்பியோடினார்.
ராஜா திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திருவண்ணாமலை மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement