தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி, கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (செப் 28) மாலை விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில், 2026ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்ய நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் சனிக்கிழமையான நேற்று (செப் 27) கரூரில் தேர்தல் பிரசாரத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி, கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு
இன்று (செப் 28) மாலை விசாரணைக்கு வருகிறது. விஜய் பிரசாரத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, நீதிமன்றம் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யும். அதேநேரத்தில், இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.










