ராகவேந்திரர் கோவிலில் கன்யா பூஜை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோவிலில், நேற்று மாலை கன்யா பூஜை நடந்-தது.
நவராத்திரியின், 9 நாட்களிலும், பெண் குழந்-தைகளை தேவியாக கருதி உபசரிக்க வேண்டும் என தேவி புராணம் கூறுகிறது. அவ்வாறு உபச-ரிக்கையில் தேவியே அந்த வீட்டில் அருள் புரிவ-தாக நம்பிக்கை. பெண் குழந்தைகளிடம் உள்ள சக்தியை, தேவியின் சக்தியாக அங்கீகரிப்பதே கன்யா பூஜை. அதன்படி, கிருஷ்ணகிரி பழைய-பேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய ராகவேந்திர ஸ்வாமிகள் கோவிலில், பிராமணர் நலச்சங்கம் சார்பில், நேற்று மாலை நவராத்திரி கன்யா பூஜை நடந்தது.
இதில், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், சுஹாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவை நடந்தது. 3 சுமங்கலிகள் மற்றும், 25 பெண் குழந்-தைகளுக்கு மாலை அணிவித்து, பூஜை பொருட்கள் வழங்கி, ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து அனைத்து குழந்தைகளையும் பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவி, சிறுமி மாயம்
-
மிரட்டல் - மறியல் எதிரொலியால் வாரச்சந்தைக்கு நேரம் நிர்ணயம்
-
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலை
-
நாமக்கல்லில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் ஆறுதல்
-
அடிப்படை வசதி கேட்டு மறியல் போலீசுடன் மக்கள் வாக்குவாதம்
-
அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் தாராளம் ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் அலட்சியம்
Advertisement
Advertisement