தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,140 உயர்வு

4


சென்னை: சென்னை: சென்னையில் இன்று (செப்டம்பர் 29) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. மீண்டும் மாலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770 ஆகவும், ஒரு சவரன் ரூ.86,160 ஆகவும் விற்பனை ஆகிறது.


சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 27) தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,640 ரூபாய்க்கும், சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 85,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (செப் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் விற்பனை செய்யப்பட்டது.



மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.10,770 ஆகவும், ஒரு சவரன் ரூ.86,160 ஆகவும் விற்பனை ஆகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு, ரூ 1,140 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.86 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டு உள்ளது.

Advertisement