புதிய அங்கன்வாடி மைய கட்டுமான பணிக்கு பூமி பூஜை

திருபுவனை : கொத்தபுரிநத்தம் கிராமத்தில் ரூ.37.32 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுமான பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கொத்தபுரிநத்தம் கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்டத்தின் சார்பில் ரூ.37.32 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டட, கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர்கள் தேவேந்திரன், கிருபாகரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் யாழினி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், திருபுவனை தொகுதி ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement