கணவர் மாயம் மனைவி புகார்

அரியாங்குப்பம் : டிரைவர் வேலைக்கு சென்ற கணவரை காண வில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 37; டிரைவர்.

அரியாங்குப்பம் மார்க்கெட்டில் உள்ள பழக்கடை ஒன்றில் டிரைவர் வேலைக்கு செல்வதாக, கடந்த 21ம் தே தி, தனது மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இது குறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement