ஓட்டல் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓட்டல் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 27; பரத் (எ) ராஜமாணிக்கம், 36; நேற்று முன்தினம் இவர்கள், விழுப்புரம் சிக்னல் பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர்.

அப்போது, யுவராஜ் தனது மொபைலை காணவில்லை என ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். விழுப்புரம் மேற்கு போலீசார், யுவராஜ், பரத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement