மண்டல கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்த என்.பி.ஆர்.,

நத்தம்: அண்ணா பல்கலை 17வது மண்டல கிரிக்கெட் போட்டியில் நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம் பிடித்தது.
அண்ணா பல்கலை 17வது மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரியில் செப்.25 முதல் செப்.29 வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 22 கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன. செப்.26ல் நடந்த போட்டிகளில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி, எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி அணிகள் மோதியதில் 22 ரன்கள் வித்தியாசத்தில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.
காலிறுதி போட்டியில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணியுடன் மோதி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி காமராஜர் பொறியியல் கல்லுாரி அணியுடன் மோதி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடம்,ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர், உடற்கல்வி , இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
-
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நாளை நடக்கிறது
-
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்
-
வருங்கால தலைவராக உருவாக்குவதில் ஜே.எஸ்., பள்ளி முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனர் செந்தில்குமார் பெருமிதம்
-
ஏற்றுமதி ஊக்கத்தொகை திட்டம் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிப்பு
-
பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் பழுது
-
வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி