வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி

மாணவர்களின் கல்விக் கனவை நினைவாக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி என கல்லுாரியின் தலைவர் செல்வராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருக்கோவிலுார் கல்வி அறக்கட்டளை கிராமப்புற மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்த பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.காம்., பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு இன்று பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், பி.காம்., சி.ஏ., - பி.ஏ., தமிழ், ஆங்கிலம் மற்றும் எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்சி., முதுகலை பட்டப்படிப்புகளுடன் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி மாவட்டத்தில் சிறந்த கல்லுாரியாக உருவெடுத்துள்ளது.
கல்லுாரியின் மற்றுமொரு வளர்ச்சியாக கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், கணித பாடப்பிரிவுகளில் எம்.பில்., பட்டப்படிப்பும் துவங்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுக்கூடங்கள், நுாலகங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டர், இயற்கை எழில் நிறைந்த காற்றோட்டமான வகுப்பறைகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் ஸ்போக்கன் இங்கிலீஷ், பஸ் வசதி என மாணவர்களின் நலனில் தனி கவனம் செலுத்தி 100 சதவீத தேர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பெற்று சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்கள் கல்வி நிறுவனம், மாணவர்களின் உயர் படிப்புக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது.
மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் இரத்ததான முகாம், கிராமப்புற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.சிறந்த கல்லுாரி என்ற அந்தஸ்தைப் பெற அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்களின் உழைப்பும், சேவை மனப்பான்மையுமே காரணம்.
இவ்வாறு செல்வராஜ் கூறினார்.