ஆம்புலன்ஸ் இடத்தில் சிமென்ட் கோடவுன் கண்டுகொள்ளாத மருத்துவமனை நிர்வாகம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தில் சிமென்ட் கோடவுன் அமைத்துள்ளனர்.
சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமானவர் வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் தனியே செயல்படுகிறது.
இதனருகே ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு பிரத்யேக இடம் அமைக்கப்பட்டுள்ளது.இச்சூழலில் மருத்துவமனையில் நடக்கும் கட்டுமான பணிக்கான சிமின்ட் மூடைகள் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தில் அடுக்கப்பட்டுள்ளது. இவ்விடம் அவசர சிகிச்சை பிரிவிற்கு எதிரே உள்ளது. இதிலிருந்து பரவும் துாசிகளால் சிகிச்சை பெறுவோர் அவதிப்படுகின்றனர்.
மேலும் அரசு மருத்துவமனை வளாக பகுதியை சுற்றி புதர் மண்டி உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்து நடமாட்டங்களும் உள்ளன. சிகிச்சை பெறுபவருக்கு குடிநீர் வசதிகளும் செய்யப்படாமல் குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன.
மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையை துாய்மையாக பராமரிக்கவும், அவசர சிகிச்சை பிரிவு எதிரே செயல்படும் ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் உள்ள கட்டுமான பொருட்களை அகற்றி துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு ரொம்ப அவமானம் ஆகிவிடும்: புலம்பும் டிரம்ப்
-
டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு நிறைவு விழா; அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தொடர் விடுமுறை எதிரொலி; அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம்
-
புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
குடிநீர் சப்ளையின்றி வரி கேட்கும் அவலம் அரண்மனைப்புதுார் திருப்பதி நகர் குடியிருப்போர் குமுறல்