கார் கண்ணாடியை உடைத்து பெண் மீது தாக்குதல்
கம்பம்: கம்பம் ஜல்லிகட்டு தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் 25, இவரது மனைவி யோக பாலா 21, யோகேஸ்வரன் கடந்த வாரம் கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் முகிலன் 36 என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து யோகேஸ்வரன் மீது கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் கோம்பை ரோட்டில் நிறுத்தியிருந்த தங்களின் காரை பார்ப்பதற்காக யோக பாலா மற்றும் அவரது உறவினர்கள் சென்றுள்ளனர். அங்கு வந்த சிபிசூரியா 24, முகிலன் 36 ஆகிய இருவரும் யோகபாலாவை தாக்கினர். அங்கிருந்த அவர்களின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். யோக பாலா புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement