கோயில் நகைகளை அடகு வைத்த பூஜாரி கைது

திருவனந்தபுரம்: பூஜை செய்த கோயிலில் இருந்த நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்ற பூஜாரியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே முரிங்கூர் நரசிம்ம மூர்த்தி கோயிலில் பூஜாரியாக பணியாற்றியவர் அஸ்வந்த் 34. இவர் 2020ல் பணியில் சேர்ந்த போது கோயில் நகைகளை இவரிடம் நிர்வாகிகள் ஒப்படைத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் நகைகளை கணக்கெடுக்க வேண்டும் அஸ்வந்திடம் கோயில் மேலாளர் கூறியுள்ளார்.

ஆனால் நிர்வாகிகள் அனைவரும் வந்தால் தான் நகைகளை காட்டுவேன் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நகைகளை கணக்கெடுக்க தீர்மானித்தனர். அப்போது சில நகைகளை அருகில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக அஸ்வந்த் கூறினார். இதை தொடர்ந்து அவரை கொறட்டி போலீசில் ஒப்படைத்தனர். காசு மாலை, வளையல் உள்ளிட்ட நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக அஸ்வந்த் கூறினார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement