பலசரக்கு கடையில் தீ விபத்து

கம்பம்: கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடை உள்ளது. கடையை மூடிவிட்டு சென்ற பின் மின் கசிவு காரணமாக இரவு 11:30 மணியளவில் கடைக்குள் தீப்பிடித்துள்ளது. கடைக்குள் சாக்கு மற்றும் பேப்பர்கள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென பற்றியது. கடைக்குள் இருந்து புகை வெளியே வர துவங்கியதும், அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தந்துள்ளனர்.

கம்பம் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமானது. சேதம் குறித்து மதிப்பீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement