நகரங்களுக்கு பா.ஜ., பார்வையாளர்கள் நியமனம்

சின்னமனூர்: தேனி மாவட்ட நகரங்களில் கட்சி பணி தொய்வின்றி மேற்கொள்ளவும், தேர்தல் பணியினை வேகப் படுத்தவும் பார்வையாளர்களை பா.ஜ. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் நியமித்துள்ளார்.

2026 சட்டசபை தேர்தல் பணிகளையும் கட்சி பணிகளை நிர்வாகிகள் தொய்வின்றி மேற்கொள்ளவும் பா.ஜ. மாநில தலைமை அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தலைவர், நகரங்களுக்கு பார்வையாளர்களை நியமித்துள்ளார்.

அதன்படி சின்னமனூர் நகர் - லோகேந்திரராஜன், சின்னமனூர் கிழக்கு - மணிகண்டன், மேற்கு - மாரிமுத்து, கம்பம் நகர் - ஈஸ்வரன், மேற்கு - சின்னதுரை, கிழக்கு - தவராஜா, உத்தமபாளையம் நகர் - தெய்வம், மேற்கு - ராஜேந்திரன், கிழக்கு - திரவியம், கூடலூர் -முருகேசன், ஆண்டிபட்டி நகர் - பால்பாண்டி, வடக்கு - ரமேஷ்குமார், தெற்கு - பரமன், கடமலை வடக்கு -கருப்பசாமி, தெற்கு -மணிகண்டன்,போடி நகர் சந்திரசேகர், - மேற்கு- சஞ்சீவி கணேசன், கிழக்கு -மணிமாறன், தேனி நகர் -முத்துமணி, வடக்கு - அன்னப்பராஜா, தெற்கு சிவக்குமார், பெரியகுளம் நகர் - முத்துப் பாண்டி, மேற்கு -சாந்தகுமார், கிழக்கு -சீனிவாசன், வடக்கு செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement