நீதி விசாரணை வேண்டும்!

லடாக் யூனியன் பிரதேச மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுகின்றனர். அவர்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார். அங்கு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியான சம்பவம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

ஜனாதிபதி ஆட்சி!



பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவுக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால் என்னை சந்திக்க நேரமில்லை. பஞ்சாபில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. பஞ்சாபை நாட்டின் உணவு களஞ்சியம் எனக் கூறும் பா.ஜ., இழப்பு ஏற்படும் போது, பணம் கிடையாது என, கூறுகிறது.

பகவந்த் சிங் மான் பஞ்சாப் முதல்வர், ஆம் ஆத்மி

கெஜ்ரிவால் வழியில் பிரசாந்த்!



ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பாணியை தான், ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோரும் பின்பற்றுகிறார். அரசியலில் இடம் பிடிக்க, கெஜ்ரிவாலை போலவே அவரும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அது உண்மையா, பொய்யா என்பது விசாரணையில் தெரிய வரும்.

சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி

Advertisement