பீஹார் வாக்காளர் பட்டியல் வெளியீடு; பழையதை சீரமைத்ததில் 6% பேர் குறைப்பு

பீஹாரில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதில், மொத்தம் உள்ள, 7.89 கோடி வாக்காளர்களில், 50 லட்சம் பேர் நீக்கப்பட்டு, 7.42 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுகளில் இருந்த மொத்த வாக்காளர்களை விட 6 சதவீதம் குறைவு. பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் நவம்பருக்குள் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதையொட்டி மூன்று மாதங்களுக்கு முன், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
குற்றச்சாட்டு
' மொத்தம் உள்ள, 7.89 கோடி வாக்காளர்களும், பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருந்தது. கடைசியாக அங்கு, 2003ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடத்தப்பட்டது.
இதனால், அந்த ஆண்டுக்குப் பின் பெயர் பதிவு செய்தவர்கள், குடியுரிமை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்து வாக்காளருக்கான தகுதியை உறுதி செ ய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது.
நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள் என இந்த திருத்தப் பணியின்போது 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்து, ஆகஸ்ட் 1ல் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
இதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பா.ஜ.,வுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியலில் இ ருந்து எண்ணற்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டின.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆதாரின்
நம்பகத்தன்மை குறித்து தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இறுதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான ஆவணங்களில் ஆதாரையும் சேர்க்க
வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும்,
வாக்காளர்களுக்கு புரியும் வகையில் அதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் சிறு குறை கண்டறியப்பட்டாலும், அதை முழுமையாக ரத்து செய்து விடுவோம் என எச்சரித்து, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் தே ர்தல் கமிஷன் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
6 சதவீதம் குறைவு அ தில், மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில், 50 லட்சம் பேர் நீக்கப்பட்டு, 7.42 வாக்காளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுகளில் இருந்த மொத்த வாக்காளர்களை விட 6 சதவீதம் குறைவாகும்.
இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:
பீ ஹாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து புதிதாக தகுதியுள்ள 21.53 லட்சம் பேர் வாக் காளர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். 3.66 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
எந்தவொரு தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது ; அதே போல் தகுதியற்ற எந்தவொரு நபரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று விடக் கூடாது என்ற நோக்கில், வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணி மேற் கொள்ளப்பட்டது.
பீஹாரின் தலைமை தேர்தல் அதிகாரி, 38 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 243 தொகுதிகளில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகள், 2,976 துணை வாக்காளர் பதிவு அதிகாரிகள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூத் அளவிலான அதிகாரிகள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் 12 முக்கிய அரசியல் கட்சிகளின் துணையுடன், இந்த மாபெரும் பணி நிறைவடைந்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகும், தங்களது பெயரை சேர்க்க விரும்புவோர், சட்டசபை தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை அதற்காக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.