கட்டுமான பொருளாகும் கழிவு

உலக அளவில் அலுமினியத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வரு கிறது. இதன் உற்பத்திக்காக பாக்ஸைட் தாதுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. இந்தத் தாதுக்களில் அலுமினியத்துடன் சிலிக்கா, இரும்பு, டைட்டானியம் ஆக்சைட் ஆகியவை இருக்கும். இவற்றிலிருந்து அலுமினியம் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு மீதி இருக்கும் கழிவுகள் 'ரெட் மட்' எனப்படும்.
ஒரு டன் அலுமினியம் உற்பத்தி செய்யும்போது, இரண்டு டன் 'ரெட் மட்' உற்பத்தி ஆகிறது. இதில் ஆபத்தான கன உலோகங்கள் இருக்கும். இதன் காரத்தன்மையும் அதிகம். இவற்றை அப்படியே மண்ணில் புதைப்பதால் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கிறது. எனவே இதற்கு சரியான தீர்வு காண விஞ்ஞானிகள் முயன்று வந்தனர்.
சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலை ஆய்வாளர்கள் இதற்கு ஓர் எளிய தீர்வைக் கண்டுள்ளனர். அதாவது 'ப்ளாஸ் ஜூல் ஹீட்டிங்' எனும் முறையைக் கையாண்டு, 'ரெட் மட்' மீது மின்னல் போன்ற செயற்கையான அதீத மின் அதிர்வை 60 நொடிகளுக்குப் பாய்ச்சினர். அதன் விளைவாக ஆபத்தான உலோகங்கள் ஆவியாகி, அலுமினியம் மிகுந்த மண் மட்டும் தனியாகக் கிடைத்தது.
இதிலிருந்து மற்றொருமுறை அலுமினியம், இரும்பை உற்பத்தி செய்யலாம். இந்த மண்ணை கட்டுமானப் பொருளாகப் பயன் படுத்தலாம். ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் டன் உற்பத்தியாகும் 'ரெட் மட்'டைச் சரியாகப் பயன்படுத்துவதன் வாயிலாகச் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பல வகைகளில் குறைக்க இயலும்.
இதே போல் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் வெளியாகும் கழிவுப் பொருளையும் மறுசுழற்சி, மறுபயன் பாடு செய்தால் பூமியைப் பசுமை ஆக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும்
-
காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது; மோகன் பகவத் பெருமிதம்
-
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
-
எத்தியோப்பியாவில் சோகம்: தேவாலய கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி
-
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன்… புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு