கோவை புத்தொழில் மாநாடு துணை நிகழ்வு நடத்த அழைப்பு

சென்னை:கோவை உலக புத்தொழில் மாநாட்டில், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள் 50க்கும் மேற்பட்ட துணை நிகழ்வுகளை நடத்தி, தொழில்துறையினரை பங்கேற்கச் செய்யலாம் என, டி.என். ஸ்டார்ட் அப் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
'டி.என்., ஸ்டார்ட் அப்' தரப்பில் கூறியதாவது:
மாநாட்டில் ஏராளமான தொழில் நிபுணர்கள், முதலீட்டு நிறுவனங்கள், ஜி.சி.சி., மற்றும் தொழில் வளர் மையங்களின் (இன்குபேஷன் சென்டர்) பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
உதாரணத்துக்கு, பிரிட்டனில் இருந்து 20 பேர் கொண்ட வர்த்தக குழு வருகிறது. இதுபோன்று, 5 முதல் 22 பேர் கொண்ட குழுவினர், வெவ்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர். சர்வதேச அளவிலான மாநாடுகளில், மாநாடு தவிர்த்து, சந்திப்புகள், உரையாடல்கள் போன்ற துணை நிகழ்வுகள் நடக்கும்.
அது போல், கோவையிலும் நடத்தலாம். டி.என். ஸ்டார்ட் அப் நிறுவனம் அதற்கு துணையாக இருக்கும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலினின் பகுத்தறிவு சர்ச் செல்வதை தடுக்கவில்லையா? ஹிந்து முன்னணி கேள்வி
-
திறந்த ஜீப்பில் முதல்வருடன் சென்ற அமைச்சர் பேரன்
-
ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
-
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
-
அமைச்சர் பதவியை பறித்த மாணவர் கொலை வழக்கில் ஆதாரங்கள் இல்லை என கொப்பால் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
-
வாக்குறுதி திட்டங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு