மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது நெல் கொள்முதல் நிலையம்
உத்திரமேரூர்:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, பாப்பநல்லுார் நெல் கொள்முதல் நிலையம் நேற்று முதல் செயல்பட துவங்கி உள்ளது.
உத்திரமேரூரை அடுத்த பாப்பநல்லுாரில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இந்த கிராமத்தில் ஒவ்வொரு நெல் அறுவடை பருவத்திற்கும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம்.
தற்போது, இப்பகுதியில் சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை, அங்குள்ள கொள்முதல் நிலையத்திலேயே கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, பாப்பநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, காஞ்சிபரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், வாணிப கழக அதிகாரிகள், நெல் கொள்முதல் பணியை துவங்காமல் இருந்தனர். இதனால், அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, பாப்பநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் நேற்று முதல், மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்
-
ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்
-
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
-
அறிவு சார்ந்த வலிமையே இந்தியாவின் மாபெரும் பலம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
-
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
-
கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்