தேசிய அளவிலான குத்துச்சண்டை முதுகுளத்துார் மாணவி தேர்வு

முதுகுளத்துார்: கர்நாடகாவில் நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தமிழகம் சார்பில் விளையாட முதுகுளத்துார் மாணவி லத்திகா கரன் தேர்வாகி உள்ளார்.
தேனி மாவட்டத்தில் 2025--26ம் ஆண்டு இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி லத்திகா கரன் 19 வயது பிரிவில் 51-- 54 எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்று தேசிய போட்டிக்கு விளையாட தகுதி பெற்றார். குத்துச்சண்டை பயிற்சியாளர் பாஸ்கரன் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் சேர்ந்த மாணவி லத்திகா கரன் தேசிய அளவிலான நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு தமிழகம் சார்பில் விளையாட உள்ளார். மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக குத்துச் சண்டை போட்டியில் தகுதி பெற்றுள்ளார். மேலும் கடுமையாக பயிற்சி செய்து தேசிய அளவில் போட்டியில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பார் என்றார்.
மாணவி லத்திகா கரனை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் பாராட்டினர்.
மேலும்
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
-
அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
-
ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்
-
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
-
அறிவு சார்ந்த வலிமையே இந்தியாவின் மாபெரும் பலம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது