ராமநாதபுரத்தில் வீட்டுமனை கண்காட்சி துவக்கம் மதுரையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் குமரய்யாகோயில் அருகே உள்ள கோல்டன்ஷாப்பிங் மால்வளாகத்தில் வீட்டுமனை,அபார்ட்மென்ட்,தனி வீடுகளின் கண்காட்சி நேற்று துவங்கியது.
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்கள் கூட்டமைப்பின் (க்ரெடாய்) தமிழ்நாடு கிளையின் முன்னாள் தலைவர் இளங்கோவன்குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்.மதுரைக்ரெடாய் சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்து விஜயன் முன்னிலை வகித்தனர். க்ரெடாய் நிர்வாகி கூறியதாவது:
மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும்மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனி வீடுகள், வீட்டு மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனை குறித்த கண்காட்சி ராமநாதபுரத்தில் அக்.,3, 4, 5 ஆகிய நாட்களில் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.அனுமதி இலவசம்.
மதுரையில் முதலீடு செய்ய விரும்புவோருக்குஇந்தகண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.கண்காட்சியில் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னணி நிறுவனங்களின் 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உடனியாக முன்பதிவு செய்வோருக்கு தங்க நாணயம் வழங்கப்படும்.
உடனியாக பிளாட், வீடு, அபார்ட்மென்ட் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் வங்கியில் கடன் பெறுவதற்குஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 78250 26035 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நிகழ்வில் மதுரை க்ரெடாய் துணைத் தலைவர் ஜெயசந்திரன், செயலாளர் யோகேஷ், இணை செயலாளர் சையத் ஓமர், ராஜ்குமார், பாலசங்கர், விஜயபாரதி, ஓவு ரெட்டிமற்றும் க்ரெடாய் உறுப்பினர்கள்பங்கேற்றனர்.
மேலும்
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
-
அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
-
ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்
-
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
-
அறிவு சார்ந்த வலிமையே இந்தியாவின் மாபெரும் பலம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது