காசாவில் அமைதி முயற்சிகளில் முன்னேற்றம்: டிரம்பின் பணிக்கு மோடி வரவேற்பு

புதுடில்லி: காசாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, அதற்காக அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை பாராட்டியுள்ளார்.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
தற்போது காசா பகுதியில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காசாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அதற்கு தலைமை வகித்து அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் முடிவு, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றத்தை குறிக்கிறது. நியாயமான முறையில், அமைதியை நோக்கி எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.







மேலும்
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
-
அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
-
ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்
-
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
-
அறிவு சார்ந்த வலிமையே இந்தியாவின் மாபெரும் பலம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது