அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

திருக்கோவிலுார், : கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில் கீழத்தாழனுாரில் அ.தி.மு.க., சாதனைகள் குறித்த திண்ணை பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில், ரிஷிவந்தியம் தொகுதி, கீழத்தாழனுாரில் திண்ணைப் பிரசார மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார்.
திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், சந்தோஷ், பழனிச்சாமி, நகர செயலாளர் சுப்பு முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் குமரகுரு பங்கேற்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உரையாற்றினார். எம்.எல்.ஏ., செந்தில்குமார், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில துணை செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிலதிபர் பிரபுசிவராஜ், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், முருகன், மாவட்ட நிர்வாகிகள் சுபாஷ், குரு, முருகதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.
மேலும்
-
அமித் ஷா வருகையின்போது குடிபோதையில் இருந்த போலீஸ் அதிகாரி: சஸ்பெண்ட் செய்தது கேரள அரசு
-
அரிய வகை கனிமங்களை கைப்பற்ற உலக நாடுகள் கடும் போட்டி: ஜெய்சங்கர்
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த இடைக்கால அனுமதி வேண்டும்; அன்புமணி கோரிக்கை
-
கப்பலில் துன்புறுத்தியதாக புகார்; கிரெட்டா தன்பெர்க் சொல்வது பொய்; அடித்துச் சொல்கிறது இஸ்ரேல்!
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
-
காசாவில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை