காசாவில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: காசாவில் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் குண்டுவெடிப்பை நிறுத்துவதை ஆதரிக்கிறாரா? அமெரிக்காவின் அமைதி முயற்சிகளுடன் ஒத்துப்போகிறாரா? என்ற கேள்விக்கு, ஆம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதில் அளித்தார்.


மேலும் அவர் கூறியதாவது: காசாவில் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும். ஹமாஸ் உண்மையிலேயே அமைதியைப் பின்தொடர்வதில் உறுதியாக உள்ளதா என்பதை விரைவில் அறிந்து கொள்வேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார் . மேலும் இஸ்ரேலும், ஹமாஸும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சண்டை உடனடியாக முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement