அரிய வகை கனிமங்களை கைப்பற்ற உலக நாடுகள் கடும் போட்டி: ஜெய்சங்கர்

2

புதுடில்லி: ''நாடுகளுக்கு இடையிலான போட்டியில், அரிய வகை கனிம வளங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியே முக்கிய காரணியாக உள்ளது,'' என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

டில்லியில் கவுடில்யா பொருளாதார மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது; இன்றைய காலகட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் போரின் தன்மை அடிப்படையில் மாறிவிட்டது. அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால், தொடர்பற்ற போரின் யுகம் (contactless war) தொடங்கியுள்ளது.

அசர்பைஜான் - அர்மேனியா, உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், தொடர்பற்ற போர்கள் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய முன்னேற்றங்கள் உலக நாடுகளிடையேயான மனோநிலையில் அதிக தாக்கத்தை எதிரொலிக்கும்.

குறிப்பாக, நாடுகளுக்கு இடையிலான போட்டியில், அரிய வகை கனிம வளங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியே முக்கிய காரணியாக உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement