தமிழ்நாடு யாருடன் போராடும்: கவர்னரின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்

சென்னை: தமிழ்நாடு யாருடன் போராடும் என்ற கவர்னர் ரவியின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார். ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என்பவருக்கு எதிராகப் போராடும்.
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூட நம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்.
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும். அரசியல் சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை- வேலை வாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்.
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்.
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்.
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும். இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (7)
Saai Sundharamurthy AVK - ,
05 அக்,2025 - 22:29 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
05 அக்,2025 - 21:30 Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
05 அக்,2025 - 21:23 Report Abuse

0
0
Reply
N Sasikumar Yadhav - ,
05 அக்,2025 - 20:10 Report Abuse

0
0
Reply
Kulandai kannan - ,
05 அக்,2025 - 19:49 Report Abuse

0
0
Reply
S Balakrishnan - ,
05 அக்,2025 - 19:13 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement