மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ஷ்ரியான்ஷி கலக்கல்

அல் ஐன்: அல் ஐன் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீராங்கனை ஷ்ரியான்ஷி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), அல் ஜன் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 20, ஷ்ரியான்ஷி வாலிஷெட்டி 18, மோதினர். முதல் செட்டை தஸ்னிம் மிர் 21-15 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஷ்ரியான்ஷி, 2வது செட்டை 22-20 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-7 என மிகச் சுலபமாக வென்றார்.

மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் ஷ்ரியான்ஷி 15-21, 22-20, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'சூப்பர் 100' பட்டத்தை கைப்பற்றினார்.


ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ரேமண்ட், நிக்கோலஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement