கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்றில் தொடரும் வெள்ளம்
ஓசூர், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 2,075 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால், நேற்று காலை நீர்வரத்து, 2,507 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 2,450 கன அடி நீர் திறக்கப்பட்டது. 1,000 கன அடிக்கு மேல் தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்தாலே, கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
நேற்றுடன், 8வது நாளாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் சென்றது. அதனால், ஆற்றங்கரையோரத்திலுள்ள கெலவரப்பள்ளி, முத்தாலி, மோரனப்பள்ளி, பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி, ஆலுார், நல்லகானகொத்தப்பள்ளி, உலகம், வெங்கடேசபுரம், காமன்தொட்டி, அட்டகுறுக்கி, பாத்தகோட்டா ஆகிய, 12 கிராமங்களுக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. தென்பெண்ணை ஆற்றில் நேற்றும், ரசாயன நுரையுடன் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும்
-
சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு
-
அமைச்சர்களுடன் சாப்பிடுவது ஒரு குத்தமாய்யா? 'ஓய்வு' வதந்தியால் சித்தராமையா ஆவேசம்!
-
போக்சோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு பயிற்சி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
-
பட்டியலினத்தவருக்கு வீடு அமைக்கும் திட்டம் உயர்நீதிமன்றம் அவகாசம்
-
கோயில் மாநகர் மதுரை: தலைமை நீதிபதி பெருமிதம்
-
3.88 கி.மீ., தொலைவிற்கு பிரமாண்டமாய் இந்திரா - ராஜிவ் சதுக்க உயர்மட்ட மேம்பாலம்