ரூ.2.09 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை



ஓசூர், அகிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பேரண்டப்பள்ளி பஞ்.,ல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் பஞ்., நிதியிலிருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சிமென்ட் சாலை, கழிவு நீர் கால்வாய், பேவர் பிளாக் சாலை, குடிநீர் பைப்லைன் அமைக்க, 2.09 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் நாகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஹரிஷ், ஒன்றிய பொறுப்பாளர்கள் லோகேஷ்ரெட்டி, ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement