தமிழ் தலைவாஸ் 'ஷாக்'

புதுடில்லி: இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, டில்லியில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வென்றால் மட்டுமே, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது.
முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 22---16 என முந்தியது.
இரண்டாவது பாதி துவங்கியதும் 'ஆல் அவுட்டானது' தமிழ் தலைவாஸ் அணி (25-22). போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது மீண்டும் ஆல் அவுட்டாக, தமிழ் தலைவாஸ் 39-41 என பின்தங்கியது. முடிவில் 43-44 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பட்டியலில் 9வது இடம் பிடித்து வெளியேறியது.

Advertisement