'சூப்பர் ஓவரில்' வெ.இண்டீஸ் வெற்றி * வங்கதேசத்தை வீழ்த்தியது

மிர்புர்: வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. இரண்டாவது போட்டி மிர்புரில் நடந்தது.
'டாஸ்' வென்று களமிறங்கிய வங்கதேச அணிக்கு சவுமியா (45), சைப் (6) ஜோடி துவக்கம் தந்தது. தவ்ஹித் (12), ஷாண்டோ (15) கைவிட்டனர். வங்கதேச அணி 50 ஓவரில் 213 /7 ரன் மட்டும் எடுத்தது. கேப்டன் மெஹிதி (32), ரிஷாத் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதானசே (28), பிரண்டன் கிங் (0) ஜோடி துவக்கம் தந்தது. கார்டி (35), கிரீவ்ஸ் (26) சற்று கைகொடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவை என்ற நிலையில், 4 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 213/9 ரன் எடுக்க, போட்டி 'டை' ஆனது. கேப்டன் ஷாய் ஹோப் (53) அவுட்டாகாமல் இருந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10/1 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 9/1 ரன் மட்டும் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 'திரில்' வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமனில் உள்ளது.
முதன் முறை...
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 50 ஓவர்களையும் (300 பந்து) சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய நிகழ்வு நேற்று முதன் முறையாக நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அகீல், ராஸ்டன், பியர்ரே, குடகேஷ், அதானசே தலா 10 ஓவர்கள் வீசினர். இதற்கு முன் 1996ல் இலங்கை அணி 44 ஓவர் (264 பந்து, எதிர்-வெ.இண்டீஸ்) சுழற்பந்து வீசியது.
* வங்கதேச ஆண்கள் அணி இதுவரை 813 போட்டிகளில் (453 ஒருநாள், 154 டெஸ்ட், 206 'டி-20') பங்கேற்றுள்ளது. முதன் முறையாக நேற்றைய போட்டி 'டை' ஆனது.
மேலும்
-
விதிமுறை மீறி பட்டாசு வெடித்த 44 பேர் மீது வழக்கு
-
மழைநீர் வடிகால் துார் வாரும் பணி
-
பயணியை அலட்சியப்படுத்திய கே.எஸ்.ஆர்.டி.சி., டிரைவர்
-
ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பாராட்டு விழா; வணிகர்களுக்கு நெருக்கடி தரும் கட்சிகள்
-
ஆன்லைனில் வெள்ளி வளையல் ஆர்டர் பெண்ணிடம் ரூ.1.84 லட்சம் மோசடி
-
கொப்பாலில் மணல் கடத்தல் விசாரணைக்கு முதல்வர் உத்தரவு