மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

சாத்துார்: சாத்துார் மணியம் பட்டியை சேர்ந்தவர் மரிய செல்வம்39, அப்பகுதி அர்ச்சுனா நதியில் டிராக்டரில் மணல் திருடினார்.

இந்த வழக்கு சாத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி முத்து மகாராஜன் மண்திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அவரிடம் இருந்து டிராக்டர், டிரெயிலர்களை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Advertisement