காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு நவ.7 வரை சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம்: காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு நவ.,7 வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.,28, அக்., 9ல் காரைக்காலில் இருந்து இரு விசைப்படகில் சென்ற 29 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
விசாரணை நாளான நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை நவ., 7 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர்.
மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்ட தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்? தி.மு.க., அரசு மீது அன்புமணி சந்தேகம்
-
லாஸ்பேட்டையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
-
ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
-
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: எதிர்க்கட்சி தலைவர்
-
கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கோவில் உண்டியல் திருட்டு
Advertisement
Advertisement