பல்கலை தடகள போட்டியில் சாதனை

விருதுநகர்: மதுரை காமராஜ் பல்கலை அளவிலான தடகள போட்டிகளில் 5000மீ ஓட்டப்பந்தயத்தில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி மாணவர் மாரிசரத் பந்தயதுாரத்தை 15 நிமிடங்கள், 20 விநாடியில் கடந்து முதலிடம் வென்றார். இவர் 1988 -- 1989ன் சாதனையான 15 நிமிடங்கள், 24 விநாடி என்பதை முறியடித்தார்.

இதே மாணவர் 1500மீ போட்டியில் முதலிடம், டெக்காத்லான் பிரிவில் அஜய் விக்ரம் இரண்டாமிடம் வென்றனர். இவர்களை கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் டெய்சிராணி, ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, உடற்கல்வி இயக்குனர் முருகேசன், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement