மூலமற்றம் நீர்மின் நிலையம் பராமரிப்பு முதன் முறையாக ஒரு மாதம் மூட முடிவு
மூணாறு: மூலமற்றம் நீர்மின் நிலையம் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மாதம் மூட முடிவு செய்யப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணையின் தண்ணீரை கொண்டு மூலமற்றம் நீர் மின் நிலையத்தில் 6 ஜெனரேட்டர்கள் மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. இந்த மின் நிலையத்தில் கேரளாவுக்கு தேவையான மின்சாரத்தில் 30 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த ஜூலையில் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய மின்வாரியத்தினர் திட்டமிட்டபோதும் பலத்த மழையால் கைவிட்டனர்.
தற்போது மின்நிலையத்தில் இரண்டு 'இன் டேக் வால்வு' கள் சீரமைக்க வேண்டும். அதற்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்த வேண்டும். தவிர 5, 6, ஆகிய ஜெனரேட்டர்களில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். ஒரு இன் டேக் வால்வை சீரமைக்க 14 நாட்கள் வேண்டும். இரண்டு வால்வுகளை சீரமைக்க 28 நாட்கள் தேவை என்பதால் நவ.11 முதல் டிச.10 வரை ஒரு மாதம் மின் நிலையத்தை மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். மின் நிலையம் மூடப்படுவதால் மாநிலத்தில் 780 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் மழை காலத்தில் பண்டமாற்று முறைப்படி டில்லி, பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரம், திரும்ப 5 சதவீதம் அதிகமாக கிடைக்கும் என்பதால் மின்பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்மின் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு 50 ஆண்டுகளுக்கு இடையே முதன்முறையாக ஒரு மாதம் மூடப்படுவது குறிப்பிடதக்கது.
மேலும்
-
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம்: பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
-
தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!
-
பைனான்சியர் கடத்தல் வழக்கு: மதுரையில் இருவர் கைது
-
ரூ.8 ஆயிரம் கோடி ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை: சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
-
கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு: வடலுாரில் 68 பேர் கைது
-
வாலிபரை தாக்கிய 20 பேர் மீது வழக்கு