126 டன் விதைகள் கையிருப்பு
தேனி: மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் நெல், கம்பு உள்ளிட்ட விதைகள் 126 டன் கையிருப்பு உள்ளதாக வேளாண்துரையினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் 8 வேளாண் விரிவாக்க மையங்கள், 13 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. இங்கு நெல் கோ 55, ஏ.டி.டி.,54, என்.எல்.ஆர்., ரகங்கள் 81 டன் உள்ளன. சோளம் கே12 ரகம் 3.7 டன், கம்பு கோ10, பியூசா கம்போசைட் ரகங்கள் 3.6 டன், குதிரைவாலி ஏ.டி.எல்.,1, எம்.டி.யூ., 1 ஆகிய ரகங்கள் ஒரு டன், துவரையில் கோ 8, எல்.ஆர்.ஜி.,53 4.2 டன், உளுந்து வி.பி.என்., 8,10,11 ஆகிய ரகங்கள் 16.7 டன், பச்சைபயறு கோ9, வி.பி.என்., 3 ஆகிய ரகங்கள் 1.6 டன், தட்டைபயறு கோ சி.பி.,9, வி.பி.என்.,4 ஆகிய ரகங்கள் 4.8 டன், நிலக்கடலை தாரணி, கர்நர் 4 ஆகிய ரகங்கள் 8.1 டன் என மொத்தம் 126 டன் இருப்பு உள்ளது.
விதைகள் தேவையுள்ள விவசாயிகள் வேளாண் விரிவாக்க, துணை விரிவாக்க மையங்களில் கணினி சிட்டா, ஆதார், புகைப்படம் வழங்கி விதைகள் பெறலாம் என்றனர்.
மேலும்
-
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம்: பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
-
தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!
-
பைனான்சியர் கடத்தல் வழக்கு: மதுரையில் இருவர் கைது
-
ரூ.8 ஆயிரம் கோடி ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை: சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
-
கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு: வடலுாரில் 68 பேர் கைது
-
வாலிபரை தாக்கிய 20 பேர் மீது வழக்கு