மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: எதிர்க்கட்சி தலைவர்
புதுச்சேரி: மதிப்பெண் அடிப்படையிலான செவிலியர் தேர்வு முறை ஊழலுக்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசு 226 செவிலியர் பணியிடங்களை போட்டி தேர்வு தேர்வு மூலம் நிரப்பாமல், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு, செவிலியர் படிப்பு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
தேர்வு நடத்துவதே வெளிப்படையான வழி என்று பின்பற்றி வந்த அரசு, செவிலியர் தேர்வில் மட்டும் மதிப்பெண் அடிப்படையை முன் வைப்பது ஏன்.
மத்திய அரசின் செவிலியர் வகுப்புத் தேர்வுக்காக ஆண்டுக்கு இருமுறை 'நார்செட்' என்ற தேர்வு முறையை பின்பற்றி வரும் புதுச்சேரி அரசு இதனை புறக்கணித்து மதிப்பெண் முறைக்கு தாவுவதின் அவசியம் என்ன.
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டியவர்களை முறைகேடாக உட்புகுத்தவா. இதன் மூலம் ஊழலும், லஞ்சமும் நடக்க வழிவகுக்கும். மதிப்பெண் அடிப்படை என்பது அரசு நிறுவனங்களில் பயின்றவர்களில் திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுவர்.
செவிலியர் கல்வி முடித்து பல ஆண்டுகள் மருத்துவ பணியின்றி வீட்டில் இருப்பவர்கள் மூப்பின் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு ஆகும் நிலையில், புதிதாக முடித்த திறன் உள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவர். இந்த தேர்வு முறையே முறையற்றது.
எனவே மற்ற பணியிடங்களைப்போல செவிலியர் பணியிடங்களுக்கும் நேரடி எழுத்துத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா
-
உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது: மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைந்தது: ஒரு சவரன் ரூ.88,800!