கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு
விழுப்புரம்: அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழுப்புரத்தில், அரசு எம்.ஜி.ஆர்., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் பேச்சு, ஓவியம், கவிதை, இயற்கை ஓவியப்போட்டி, புதிய தொழில் முனைவோருக்கான ஆலோசனை கோலம், பாட்டு, நடனம், குழு, தனிநபர் நடனம், வினாடி வினா, ஆளுமை திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கடந்த இரு வாரங்களாக நடந்தன.
இந்த போட்டிகளில், வென்ற மாணவியருக்கு கல்லுாரி முதல்வர் தாமரைக்கண்ணன் பரிசளித்து சிறப்புரையாற்றினார்.
இதில், சென்னை மாநிலக் கல்லுாரி தமிழ் துறை இணை பேராசிரியர் பாலாஜி, மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
முன்னதாக, இணை பேராசிரியர் செல்வராணி வரவேற்றார். கணிதவியல் துறை தலைவர் விமலாதேவி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை, பொருளியல் துறை கவுரவ விரிவுரையாளர்கள் பால்ராஜ், ஜாக்லின் ஆகியோர் செய்தனர்.
மேலும்
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா
-
உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது: மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைந்தது: ஒரு சவரன் ரூ.88,800!